என் இதயத்தைக் காணவில்லை உன்னைக் கண்ட அந்த
நொடியில் இருந்து எங்கும் தேடிவிட்டேன் எடுத்து சென்றவள்
நீ என்று தெரியாமல்.
கண்கலங்கி நின்றேன் நான் நீ என்னை காதலிக்கிறாய்
என்று தெரிந்த பின்பு மரணத்தின் அழைப்பை நான் எதிர்
நோக்கியிருந்த அந்த நொடியில்.
ரோஜாவின் இதழ்களை தூதுவிட்டேன் உன் மனதிடம்
என் காதலை உன்னிடம் சொல்ல.உன்னுடைய தோழி
என்று நினைத்து.
இரவு முழுதும் தூது விட்டேன் உனக்கு என் கண்களின்
கண்ணீர் வற்றும்வரை நீ என்னை காதலிப்பாய என்று
உன் மனதிடம் கேட்டு.
என் வீட்டு முற்றத்தில் பாத சுவடுகளை
முத்தமிட்டேன் நீ வந்ததை அறிந்து.
நெற்றியில் நீ வைக்கும் ஒற்றைப் பொட்டு
என்ன தவம் செய்ததோ தெரியவில்லை
நீ செல்லும் இடமெல்லாம் உன்னுடனே சுற்றி
வருகிறது.
உன் தலைமுடி ஒன்று உதிர்ந்தபோது தவித்தேனடி
நான் உன் கருங் கூந்தலோடு கடைசிவரை வாழ அதற்கு
குடுத்து வைக்கவில்லை என்று நினைத்து.
கல்லறையில் தினமும் நான் கதறி அழுகிறேன் நீ
என்னை காதலித்ததை அறியாமல். தனியாக நீ
தவிப்பதை பார்த்து.
தினமும் இரவில் காத்திருக்கிறேன் நீ வருவாய்
என் காதலை உன்னிடம் சொல்லிவிடலாம் என்று தான்.
உன் கண்களைக் காணும்பொழுது களைந்து விடுகிறது
என் கனவு. இன்னும் எத்தனைக் காலங்கள் காத்திருப்பது
என் காதலை உன்னிடம் நேராக சொல்ல.
நான் சொன்னாலும் கேட்பதில்லை என் மனது
நீ செல்லும் இடமெல்லாம் உன்கை கோர்த்து
நடக்க வேண்டும் என்கிறது வாழ்க்கையின் கடைசி
நிமிடங்கள் வரை.
உன்னைக் காணாத என் இரு கண்களும்
கதரியளுகிறது என் காதலி எங்கே என்று
நீ என்னை விட்டு பிரிந்த அந்த இரண்டு நிமிட
இடைவெளியில்.
என் இதயம் இடம் மாரி துடிக்கிறது எப்பொழுது உன்னை
பார்த்தேனோ அப்போதிலிருந்து. புது புது உணர்வுகள்
என் மனதில் புரியாத புதையலாய் உன்னை பார்க்கும்
போதெல்லாம் புனர் ஜென்மம் அடைகிறது.
புதிதாக பிறந்தேன் உன் கண்களின் கருவிழியில் இருந்து
காதலாக.என்னை அறிமுகம் செய்கிறேன் உன் கண்கள் தான்
எனக்கு கருவறை என்று.
என்னுடைய காதலை முதன்முறை உன்னிடம் சமர்பித்தேன்
என்னை ஏற்றுக்கொள்வாய் என்ற நம்பிக்கையில். நீயும் என்னை
காதலித்திருக்கிராய் என்று தெரிந்துகொண்டேன் நீ என்னை சொர்க்கத்தில்
சந்திக்கும் போது.
என்னை மட்டும் தனியாக தவிக்கவிட்டு நீ மட்டும்
நிம்மதியாய் உறங்குகிறாய் என் இதயம் முழுதும்.
நான் இருந்த கருவறையிலேயே கல்லறை ஒன்றையும்
அமைத்திருப்பேன் என் உயிர் காதலியே நீ மட்டும்
இம்மண்ணில் பிறக்காமல் இருந்திருந்தால்.
No comments:
Post a Comment