Tuesday, 28 December 2010

செவ்விதழின் சிரிப்பில் என்னை சிறை எடுத்த அவளின்
ஒருக்கன் பார்வை போதும் பல்லாண்டு அவள் நினைவில்
நான் வாழ.

வெற்று காகிதத்தில் வரைந்தேன் என் கவிதைகளை
உனக்காக அதில் பார்கிறேனடி உன் மனதை
காதலுக்காக கவிதை போர் தொடுப்பேன் உன் மனதிடம்
தினமும் .

திருடன் என்று நினைக்கிறாய் என்னை நீ
காதல் என்பதே களவு தொழில் தானே .

கண்ணே உனக்கு தெரியவில்லையா என் காதல்
என்னை பற்றி அறிந்திருப்பாய் என்றிருந்தேன் என்னை
எனக்கே அறியவைத்தவள் நீ தானே .

சிறு சிறு கனவுகளை சித்தரித்து வரைந்த என் காதல் ஓவியம்
சிறு துளி கண்ணீரால் கரைந்து போனது .

சிர்பியில் முளைத்த முத்துபோல் என் மனதில்
தோன்றிய ஆசைகளை என் காதலுக்குத் தூதாய்
கவிதைகளை எழுதுகிறேன் என் கனவு தேவதைக்காக.

என் காதலால் அலைகிறேன் தினமும் உன் பின்னல்
நான் வாழ விட்டாலும் என் காதல் வாழும் இவ் உலகம்
அழியும்வரை.

என் காதலுக்கு தேவை இல்லை கவிஞரின் காதல் வரிப் பாடல்கள்
உன் மனக் கதவு திறக்காவிடினும் எப்பொழுதும் காத்திருக்கும் என் மனது அதில்
உன்னை குடி வைக்க.

நீ என்னுடன் பேசும் வார்த்தைகள் அனைத்தும்
என் மனதில் ஓயாமல் ஒலிக்கும் ஜீவ மொழி
ஆனது நீ அறிந்திருப்பாய் என்றிருந்தேன் என்னை
எனக்கே அறிய வைத்தவள் நீ தானே.

ஆயிரம் பெண்களின் மத்தியில் தேடினேன் அறிமுகமாகாத
உன் முகத்தை.

1 comment: